Monday, 23 May 2016

ஜெயலலிதாவை எதிர்த்தவர் இப்போது என்ன செய்கிறார்?

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக-வில் ஜெயலலிதா போட்டியிட்டு 96,269 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து திமுக-வில் போட்டியிட்ட சிம்லா முத்துசோழன் 56,732 வாக்குகள் பெற்று, 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். தோல்வியடைந்தாலும் முதல்வர் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர் என்ற பெயர் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறார். தொகுதிக்குள் ‘ஜெயலலிதாவை எதிர்த்தவர்’ என்று அழைக்கிறார்கள். திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டுத் திரும்பியவர் தொகுதி முழுக்க தனக்காகப் பணிபுரிந்த திமுக-வினருக்கு நன்றி சொல்லி வருகிறார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்களில் முதலிடம் பிடித்த மாணவி சொப்னாவை, அவர் குடியிருக்கும் எர்ணாவூர் சுனாமி குடியிருப்புக்குச் சென்று வாழ்த்திவிட்டு, ரொக்கப் பரிசு வழங்கியுள்ளார். இப்படி, உற்சாகமாகவே தொகுதியில் வலம்வருகிறார் சிம்லா முத்துசோழன்’ என்கின்றனர் திமுக-வினர்.

No comments:

Post a Comment