Saturday, 21 May 2016

ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்றி! நன்றி!!நன்றி!!!

ஆர்.கே.நகர் தொகுதி
மக்களுக்கு நன்றி! நன்றி!!நன்றி!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி!நன்றி!!

கழக வெற்றிக்காக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உடனிருந்து பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சியை சேர்ந்த
அனைத்து தோழர்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எதையும் எதிர்பாராமல் கழக வெற்றி ஒன்றே குறிக்கோள் என பாடுபட்ட கழக உடன்பிறப்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைதெரிவித்து கொள்கிறேன்.

வென்றாலும் தோற்றாலும் மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திமுக.

அந்த அடிப்படையில் நான் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கான என் பணிகள் தொடரும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறேன்!

அன்புடன்...
சிம்லா முத்துசோழன்

No comments:

Post a Comment