Monday, 23 May 2016
ஜெயலலிதாவை எதிர்த்தவர் இப்போது என்ன செய்கிறார்?
ஆர்.கே.நகர்
தொகுதியில் அதிமுக-வில் ஜெயலலிதா போட்டியிட்டு 96,269 வாக்குகள் பெற்று
வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து திமுக-வில் போட்டியிட்ட சிம்லா முத்துசோழன்
56,732 வாக்குகள் பெற்று, 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை
சந்தித்தார். தோல்வியடைந்தாலும் முதல்வர் வேட்பாளரை எதிர்த்து
போட்டியிட்டவர் என்ற பெயர் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
தொகுதிக்குள் ‘ஜெயலலிதாவை எதிர்த்தவர்’ என்று அழைக்கிறார்கள். திமுக தலைவர்
கருணாநிதியை சந்தித்துவிட்டுத் திரும்பியவர் தொகுதி முழுக்க தனக்காகப்
பணிபுரிந்த திமுக-வினருக்கு நன்றி சொல்லி வருகிறார். அப்போது, சென்னை
மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்களில் முதலிடம் பிடித்த மாணவி
சொப்னாவை, அவர் குடியிருக்கும் எர்ணாவூர் சுனாமி குடியிருப்புக்குச் சென்று
வாழ்த்திவிட்டு, ரொக்கப் பரிசு வழங்கியுள்ளார். இப்படி, உற்சாகமாகவே
தொகுதியில் வலம்வருகிறார் சிம்லா முத்துசோழன்’ என்கின்றனர் திமுக-வினர்.
Saturday, 21 May 2016
ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்றி! நன்றி!!நன்றி!!!
ஆர்.கே.நகர் தொகுதி
மக்களுக்கு நன்றி! நன்றி!!நன்றி!!!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி!நன்றி!!
மக்களுக்கு நன்றி! நன்றி!!நன்றி!!!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி!நன்றி!!
கழக வெற்றிக்காக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உடனிருந்து பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சியை சேர்ந்த
அனைத்து தோழர்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எதையும் எதிர்பாராமல் கழக வெற்றி ஒன்றே குறிக்கோள் என பாடுபட்ட கழக உடன்பிறப்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைதெரிவித்து கொள்கிறேன்.
வென்றாலும் தோற்றாலும் மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திமுக.
அந்த அடிப்படையில் நான் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கான என் பணிகள் தொடரும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறேன்!
அன்புடன்...
சிம்லா முத்துசோழன்

Labels:
DMK 2016,
R K Nagar,
Shimla MuthuChozhan,
TN Elections 2016
Location:
India
Friday, 20 May 2016
Tuesday, 17 May 2016
Saturday, 14 May 2016
Friday, 13 May 2016
Subscribe to:
Posts (Atom)