சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக
சார்பில் வழக்கறிஞரும், திமுக மகளிர் அணியைச் சேர்ந்தவருமான சிம்லா
முத்துச்சோழனை களம் இறக்கியுள்ளது திமுக.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சிம்லா முத்துச்சோழன்.
பரம்பரை திமுககாரர். அரசியல்வாதி, சமூக சேவகி, வழக்கறிஞர், இல்லத்தரசி என
பல முகம் கொண்டவர் சிம்லா.
திமுகவில் வட சென்னை மகளிர் சட்ட அணி ஒருங்கிணைப்பாளராக இருந்த அவர்
தற்போது மாநில திமுக மகளிர் அணி கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார்.
கலப்பு மணம் புரிந்தவர் சிம்லா. இவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவரது
கணவர் இந்து மதம்.
2009ம் ஆண்டு முதல்வர் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். முதல்வர்
ஜெயலலிதாவுக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஜெயலலிதா படித்தே அதே
சர்ச் பார்க் பள்ளியில்தான் இவர் 1999ல் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.
ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்பு மோதுவாரா என்றெல்லாம் பேச்சுக்கள் நிலவி வந்த
நிலையில் சிம்லா முத்துச்சோழனை திமுக வேட்பாளராக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment